எம்.சி.சி தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு

| 05 May 2016

 

கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, தனது தனது பொறுப்பை ஏற்கவுள்ளார்.

 

லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார்.

 

எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழகம் சார்பாகப் பதவியேற்கும் இளைய தலைவராகத் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

scroll to top