'தனிப்பட்ட மைல்கல்களுக்கு இடமில்லை'

| 13 December 2016

 

இந்திய அணியின் டெஸ்ட் தலைவராகப் பதவியேற்ற பின்னர், இந்திய வீரர்கள், தங்களது தனிப்பட்ட அடைவுகளை விடுத்து, அணிக்காக விளையாடுவதே, மிக முக்கியமான ஒரு விடயம் என, இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி குறிப்பிட்டார்.

 

"தனிப்பட்ட பெறுபேறுகளைப் பற்றிக் கவலைப்படாமல், டெஸ்ட் போட்டிகளில் தங்களை வெளிப்படுத்தவே, அணியிடம் நான் விரும்பினேன். ஏனெனில் பல நேரங்களில், டெஸ்ட் போட்டியொன்றில் உங்களுக்கு ஒரு மணித்தியாலம் இருக்கும், அதில் போட்டியை உங்கள் அணிக்காக நீங்கள் வென்று கொடுக்கலாம். ஆனால், உங்களுடைய தனிப்பட்ட மைல்கல்லுக்காக அல்லது அதைப் போன்ற காரணத்துக்காக, நீங்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. அவ்வாறான நிலைமைகளை நாங்கள் நீக்கியுள்ளோம்" என கோலி குறிப்பிட்டார்.

scroll to top