'ஆக்ரோஷத்துடன் பந்துவீசுவேன்'

| 13 December 2016

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரில், தான் ஆக்ரோஷமாகப் பந்துவீசப் போவதாக, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் றியாஸ் தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவில் வைத்து, உலகக் கிண்ணப் போட்டியொன்றில் ஷேன் வொற்சனுக்கு ஆக்ரோஷமாகப் பந்துவீசி, அவரைத் தடுமாறச் செய்த றியாஸ், அந்த ஞாபகத்துடன் இப்போட்டியில் களமிறங்குகிறார்.

 

"நான், ஆக்ரோஷமாகப் பந்துவீசப் போகிறேன். பவுண்சர்களையும் நான் வீசுவேன். திட்டத்தில் அதுவும் ஓர் அங்கம்" என்று றியாஸ் குறிப்பிட்டார்.

 

பிறிஸ்பேண் ஆடுகளம், வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது என்பதால், றியாஸ், முக்கியமான வீரராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

scroll to top