முதலிரு இடங்களில் சுழற்பந்துவீச்சு ஜோடி

| 21 December 2016

 

இந்திய டெஸ்ட் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவரும், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், முதலிரு இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா கைப்பற்றிய 10 விக்கெட்டுகளைத் தொடர்ந்தே, இரண்டாவது இடத்தை அவர் பிடித்துள்ளார். இதன்மூலம், 1974ஆம் ஆண்டு பிஷன் சிங் பேடி, பக்வத் சந்திரசேகர் இருவரும் முதலிரு இடங்களையும் பிடித்த பின்னர், இந்திய வீரர்கள் இருவர் இவ்வாறு பந்துவீச்சில் முதலிரு இடங்களையும் பிடிப்பது, இதுவே முதன்முறையாகும்.

 

5ஆவது போட்டி ஆரம்பிக்கும் போது 6ஆவது இடத்தில் காணப்பட்ட ஜடேஜா, 4 இடங்கள் முன்னேறி, இந்த முன்னிலையைப் பெற்றுள்ளார்.

 

துடுப்பாட்ட தரவரிசை: (முதல் 10 இடங்கள்)
ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், கேன் வில்லியம்ஸன், ஹஷிம் அம்லா, ஏபி.டி.வில்லியர்ஸ், டேவிட் வோணர், யுனிஸ் கான், செற்றேஸ்வர் புஜாரா, ஜொனி பெயர்ஸ்டோ.

 

பந்துவீச்சுத் தரவரிசை: (முதல் 10 இடங்கள்)
இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ரங்கன ஹேரத், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் அன்டர்சன், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், ஸ்டுவேர்ட் ப்ரோட், நீல் வக்னர், யாசீர் ஷா.

 

சகலதுறை வீரர்கள் தரவரிசை: (முதல் 5 இடங்கள்)
இரவிச்சந்திரன் அஷ்வின், ஷகிப் அல் ஹஸன், இரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி.

scroll to top