'துடுப்பாட்ட இடைவெளிகள் அடைப்பு'

| 22 December 2016

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 0-4 என்ற கணக்கில் இழந்துள்ள போதிலும், துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, அவ்வணியின் பயிற்றுநர் போல் ஃபப்றேஸ் தெரிவித்துள்ளார்.

 

"இங்கு நாங்கள் வரும் போது, குக்குடனும் றூட்டுடனும் முன்வரிசையில் துடுப்பெடுத்தாடக் கூடிய, சிறப்பான திறமை கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் தேவை என்ற நிலையில் வந்தோம். ஹசீப், அதைக் காட்டியுள்ளார்.

 

"எங்களுடைய துடுப்பாட்ட வரிசையில், சில இடைவெளிகளுடன் நாம் வந்தோம். சரியானவர்களை நாங்கள் பெற்றுள்ளோம் என நான் நினைக்கிறேன். ஆகவே, அது சிறந்ததொன்றாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.

scroll to top