பங்களாதேஷுக்கு எதிராக டெய்லர்

| 05 January 2017

 

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான றொஸ் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

கண்ணில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக, அண்மைய சில சர்வதேசப் போட்டிகளைத் தவறவிட்டிருந்த டெய்லர், உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட பின்னர், மீண்டும் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

தவிர, பாகிஸ்தானுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் விளையாடாத ட்ரென்ட் போல்ட்டும், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

குழாம்: கேன் வில்லியம்ஸன், ட்ரென்ட் போல்ட், டீன் பிறௌண்லி, கொலின் டி கிரான்ட்ஹொம், மற் ஹென்றி, டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ், ஜீற் றாவெல், மிற்சல் சான்ட்னெர், டிம் சௌதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜே.வற்லிங்.

scroll to top