பாகிஸ்தான் குழாமில் ஹபீஸ்

| 08 January 2017

 

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில், சிரேஷ்ட சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி மோசமாகத் தோற்ற நிலையிலேயே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாமில், மேலதிக வீரராக ஹபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி முகாமைத்துவத்தினதும் அணித்தலைவர் அஸார் அலியினதும் வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் விளையாடியிருக்காத ஹபீஸ், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கு, மிக அண்மையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாகவே, அவர் உள்ளடக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

scroll to top