சம்பியன்ஸ் கிண்ணத்தில் தர்மசேன

| 18 May 2017

ஜூன் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான நடுவர்களின் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில், இலங்கையின் குமார் தர்மசேனவும் இடம்பெற்றுள்ளார்.

 

12 பேரைக் கொண்ட இந்த நடுவர் குழாமில், தர்மசேன தவிர, அலீம் தார், மராயஸ் எரஸ்மஸ், கிறிஸ் கஃபனி, இயன் கூல்ட், றிச்சர்ட் இலிங்வேர்த், றிச்சர்ட் கெற்றல்புரோ, நைஜல் லோங், புரூஸ் ஒக்ஸென்போர்ட், சுந்தரம் ரவி, போல் றைஃபெல், றொட் டக்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 

இதில், கஃபனி, இலிங்வேர்த், ரவி, றைஃபெல் ஆகியோர், முதன்முறையாக, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நடுவர்களாகச் செயற்படவுள்ளனர்.

scroll to top