இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று

| 05 July 2017

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது.

 

கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது.

 

எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை, இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

scroll to top