இலங்கைக்கெதிரான இந்தியக் குழாம் அறிவிப்பு

| 10 July 2017

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் இலங்கையில் இடம்பெறவுள்ள 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி அடங்கிய முழுமையான தொடரில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில், சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்டியா, இந்தக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, லோகேஷ் ராகுல், றோகித் ஷர்மா ஆகியோர், டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

அண்மைய காலத்தில் விளையாடிய வீரர்களில் கருண் நாயர், ஷீகர் தவான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

 

குழாம்: விராத் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, றோகித் ஷர்மா, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சகா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.

scroll to top