இங்கிலாந்திலிருந்து திரும்பினார் தமிம்

| 14 July 2017

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், இங்கிலாந்தின் பிராந்திய அணியான எசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு போட்டியுடன் நாடு திரும்பியுள்ளார்.

 

இலண்டனின் கிழக்குப் பகுதியிலுள்ள ஸ்ட்ரட்போர்ட் என்ற இடத்தில், தமிம் இக்பாலின் மனைவி மீது, இனம் சம்பந்தமான அவதூறு வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இவ்விடயத்தில், தமிம் இக்பாலின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு, எசெக்ஸ் நிர்வாகம் கோரியது.

 

கருத்துத் தெரிவித்த தமிம் இக்பால், தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியதாகத் தெரிவித்தார். அத்தோடு, வெறுப்புக் குற்றத்தின் காரணமாக நாடு திரும்பியதாக வெளியான அறிக்கைகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

scroll to top