ஆஸியின் களத்தடுப்புப் பயிற்சியாளராக ஹடின்

| 10 August 2017

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரரான பிரட் ஹடின், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்புப் பயிற்சியாளரான கிரேக் ப்ளூவட்டைப் பிரதியீடு செய்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழாமில் இணைகின்றார்.

 

அவுஸ்திரேலியாவின் பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில், அவுஸ்திரேலியக் குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ள ஹடினுக்கு, 2019ஆம் ஆண்டு இறுதி வரை, இரண்டாண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

 

ப்ளூவட், தெற்கு அவுஸ்திரேலிய மாநில 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியைப் பொறுப்பேற்கிறார்.

scroll to top