மூன்றாவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

| 13 August 2017

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை தடுமாறுகிறது.

 

நேற்று ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய இரண்டாம் நாளை 6 விக்கெடுகளை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்து, முதல் மணித்தியாலத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தபோதும், ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான 108 ஓட்டங்களின் துணையோடு, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 119, ஹர்டிக் பாண்டியா 108, லோகேஷ் ராகுல் 85 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்‌ஷான் சந்தகான் 5, மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஷ் சந்திமால் 48, நிரோஷன் டிக்வெல்ல 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4, மொஹமட் ஷமி, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து, ஃபொலோ ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, நேற்றைய ஆட்டநேர முடிவின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதலாவது இனிங்ஸை விட 333 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. வீழ்த்தப்பட்ட விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார்.

 

scroll to top