'40 வயதுவரை ஏன் விளையாட முடியாது?'

| 03 September 2017

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சனுக்கு, தற்போது 35 வயதாகின்ற நிலையில், அவரது ஓய்வுக்காலம் குறித்து ஏனையோர் சிந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதுபற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது 497 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் காணப்படும் அன்டர்சன், 500 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது வேகப்பந்து வீச்சாளராக மாறக் காத்திருக்கிறார்.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "40 வயதுவரை என்னால் விளையாட முடியாது என்பதற்கு, எந்தக் காரணமும் இல்லை. எனது கிரிக்கெட் வாழ்வில், நான் உச்சபட்ச திறமையுள்ள பந்துவீச்சாளராகவும் சிறப்பான தொடர்ச்சியுடன் பந்துவீசுபவராகவும், தற்போதே உள்ளேன். 

 

"2020-21இல் இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரில் நான் விளையாட மாட்டேன் என, என்னால் கூற முடியாது. நான் கொண்டிருக்கும் உடலைக் கொண்டிருப்பதற்கு, நான் அதிர்ஷ்டசாலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

scroll to top