ஜோடி குறித்து றென்ஷோவுக்கு நம்பிக்கை

| 03 September 2017

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோணர், மற் றென்ஷோ இருவரும், ஒருவருக்கொருவர் மாறுபட்ட விளையாடும் பாணியைக் கொண்டுள்ள போதிலும், இந்த ஜோடி குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக, றென்ஷோ குறிப்பிட்டார்.

 

வோணர், மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதோடு, குள்ளமானவர். றென்ஷோ, பொறுமையுடன் விளையாடக் கூடியவர் என்பதோடு, மிகவும் உயரமானவர்.

 

இந்த உயர மாற்றத்துக்கு ஏற்ப பந்துவீசுவது, பந்துவீச்சாளர்களுக்குக் கடினமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக, றென்ஷோ குறிப்பிட்டார்.

 

ஆஷஸ் தொடர், மிகவும் சுவாரசியமானதாக இருக்குமென எதிர்பார்க்கின்ற போதிலும், சிட்டகொங்கில் இடம்பெறவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதைப் பற்றிக் கவனஞ்செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

scroll to top