வெட்கமடைகிறார் லாரா

| 05 September 2017

1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடிய விதத்தைப் பற்றி வெட்கமடைவதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

 

புகழ்பெற்ற, எம்.சி.சி கிரிக்கெட் உணர்வுக்கான கௌட்ரி கிரிக்கெட் விரிவுரையை, லோர்ட்ஸ் மைதானத்தில் ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

முதல்நிலை அணியாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள், விளையாட்டு உணர்வுகளுடன் விளையாட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

 

தற்போதைய நிலையில், ஆட்டமிழந்த துடுப்பாட்ட வீரர்கள், நடுவரின் தீர்ப்புக்குக் காத்திருக்காமல் வெளியேற வேண்டும் என்று கோரிய அவர், முன்னணி அணிகள், கிரிக்கெட் எவ்வாறு விளையாடப்பட வேண்டுமென்பதைக் காட்ட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

scroll to top