வென்றது அவுஸ்திரேலியா

| 12 September 2017

 

இந்தியாவின் சென்னையில், இன்று இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியில் 103 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

 

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 76 (60), ட்ரெவிஸ் ஹெட் 65 (63), டேவிட் வோணர் 64 (48), ஸ்டீவ் ஸ்மித் 55 (68), மத்தியூ வேட் 45 (24) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர், குஷங் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிக்கு, 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய கிரிக்கெட் சபை பதிவொருவர் அணி, 48.2 ஓவர்கள் முடிவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று 103 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஶ்ரீவட்ஸ் கோஸ்வாமி 43 (54), மயங் அகர்வால் 42 (47), குஷங் பட்டேல் ஆட்டமிழக்காமல் 41 (48), அக்‌ஷய் கர்னேவார் 40 (28) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஸ்தன் அகர் 4 விக்கெட்டுகளையும் கேன் றிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

scroll to top