மீண்டும் ஸ்டெய்ன்

| 12 September 2017

 

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்குபற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

தோட்பட்டையில் என்பு முறிவு ஏற்பட்டமையின் காரணமாக, கடந்தாண்டு நவம்பரின் பின்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத ஸ்டெய்ன், கடந்த மாதத்திலேயே, உபாதையிலிருந்து குணமாகியிருந்தார்.
நீண்டகாலப் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத நிலையில், உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றி, தனது உடற்றகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. இதனால், உள்ளூர் அணியான டைட்டன்ஸ் சார்பாக அவர் விளையாடவுள்ளார்.

 

உள்ளூர்த் தொடரின் முதற்சுற்றில் மாத்திரமே அவரால் விளையாட முடியுமென்பதோடு, அவரோடு இணைந்து ஃபப் டு பிளெஸி, மோர்னி மோர்க்கல், டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகிய சர்வதேச வீரர்களும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

scroll to top